மேலாடையை கழற்றி கவர்ச்சி ஆட்டம்., உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா ரசிகை., கைது செய்யப்படுவாரா?
கத்தார் 2022 FIFA உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவின் வெற்றியை கொண்டாடிய ரசிகை ஒருவர் மேலாடையை கழற்றிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினா அணி 36 வருடங்கள் கழித்து அதன் 3-வைத்து உலகக்கோப்பையை வென்றதையடுத்து, உலகம் முழுவதும் உள்ள அர்ஜென்டினா ரசிகர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள்.
ஆனால் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்ற லுசைல் மைதானத்தில் அர்ஜென்டினா ரசிகை ஒருவரின் ஆரவாரம் சற்று அதிகமாகவே சென்றது.
கொன்சாலோ மான்டிலின் பெனால்டி கிக் மூலம் அர்ஜென்டினா வெற்றியை நெருங்கியபோது, அர்ஜென்டினா ரசிகர் உற்சாகத்துடன் கமெரா முன் தனது மேலாடையை கழற்றி அரை நிர்வாணமாக ஆடினார்.
அவரது வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி வைரலாகிவிட்டன.
சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்
கத்தாரில் உள்ள கடுமையான விதிகளின்படி, ரசிகர்கள் தங்கள் உடலை நிர்வாணமாக வெளிப்படுத்தினால் அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
பார்வையாளர்கள் நாட்டின் கலாச்சாரம் மற்றும் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறு கத்தார் அரசு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. குறிப்பிட்ட வரம்புக்கு மேல் உடலை வெளிக்காட்டும் ஆடைகள் இருக்கக் கூடாது என்ற கருத்தும் இருந்தது.
கத்தார் சட்டப்படி தோள்பட்டை மற்றும் முழங்கால்களை மறைக்கும் ஆடை அணிய வேண்டும். அதேபோன்று பெண்கள் இறுக்கமான ஆடைகளை அணிந்து வயிற்றை வெளியில் காட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கத்தார் அல்லாத பெண்கள் முழு உடல் முக்காடு அணிய வேண்டிய அவசியமில்லை.
ஞாயிற்றுக்கிழமை கத்தாரின் லுசைல் ஸ்டேடியத்தின் முன் வரிசையில் நின்றிருந்த அந்தப் பெண், சிறிது நேரம் மறைந்திருந்தார். அவள் கொண்டு வந்த கால்பந்து பேனர், துரதிர்ஷ்டவசமாக தவறி விழுந்தது.
கைது செய்யப்படும் அபாயம்
பெண்ணின் படங்கள் சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், பலரும் அவரது தலைவிதி குறித்து கவலை தெரிவித்தனர். கத்தாரின் விதிகளை மீறியதற்காக அவர் கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாக அவர்களில் பலர் கூறுகின்றனர்.
அந்தப் பெண்ணின் அடையாளம் வெளியிடப்படவில்லை மற்றும் லுசைல் ஸ்டேடியத்தில் மேலாடையின்றி சென்றதற்காக கத்தார் அதிகாரிகள் அவரை கைது செய்தார்களா என்பது தெரியவில்லை.
ஆனால் சமூக வலைதளங்களில் அந்தப் பெண்ணைப் பற்றி விவாதம் நடந்து வருகிறது.
முன்னதாக குரோஷியா நாட்டைச் சேர்ந்த மொடல் அழகி இவானா நோல், தனது நாடு உலகக்கோப்பையை கைப்பற்றினால், மைதானத்திலிருந்து நிர்வாணமாக செல்வேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அனால், அரையிறுதி வரை சென்ற குரோஷியா அணி அர்ஜென்டினாவிடம் தொற்று, பின்னர் மொரோக்கோ அணியுடன் மோதி மோன்ராம் இடத்தை பிடித்தது.