பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை விடுத்த அர்ஜென்டினா ஜனாதிபதி
Argentina president milei threat issues to uk: அர்ஜென்டினா ஜனாதிபதி சேவியர் மிலே பிரித்தானியாவிற்கு ஃபாக்லாண்ட்ஸ் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
பிரித்தானிய எண்ணெய் வளங்களை சட்டவிரோதமாக கொள்ளையடிப்பதாக அர்ஜென்டினா ஜனாதிபதி சேவியர் மிலே பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
சேவியர் மிலே
அர்ஜென்டினா ஜனாதிபதி சேவியர் மிலே (Javier Milei), பிரித்தானியா சட்டவிரோதமாக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஃபாக்லாண்ட்ஸ் தீவுகளுக்கு அப்பால் எண்ணெய் எடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், பிரித்தானியாவிற்கு எதிராக தனது அரசாங்கம் சர்வதேச நடுவர் மன்றத்தை நாடும் என்று கூறியுள்ளார்.
மேலும், அவர் ஃபாக்லாண்ட்ஸ் தீவுகள் தொடரில் பிரித்தானியாவிற்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
தற்காலிக தடை
அதாவது, Sea Lion என்ற கடலோர எண்ணெய் வயலின் பணிகளை நிறுத்துவதற்கு, பிரித்தானியாவிற்கு 2 வார கால அவகாசம் வழங்கியுள்ளதாக மிலேயின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இல்லையெனில், ஹம்பர்க்கைத் தளமாகக் கொண்ட கடல்சார் நீதிமன்றமான கடல் சட்டத்திற்கான சர்வதேச தீர்ப்பாயத்திடம் இத்திட்டத்திற்கு தற்காலிக தடை விதிக்குமாறு அர்ஜெண்டினா கோரும் என கணிக்கப்பட்டுள்ளது.
மக்கள்த்தொகை குறைவாக உள்ள தீவுக்கூட்டத்தின் பொருளாதாரத்தை மாற்றியமைக்கக்கூடிய வளங்கள் மீதான நடவடிக்கை தீவிரப்படுத்துவதாக கூறப்படுகிறது.
