நிக்கோலஸ் மதுரோவை அர்ஜென்டினாவுக்கு நாடு கடத்த வேண்டும்: அமெரிக்காவிடம் கோரிக்கை
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அர்ஜென்டினாவுக்கு நாடு கடத்துங்கள் என அந்நாட்டு நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
நிக்கோலஸ் மதுரோ கைது
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டிற்காக வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி இருவரும் அமெரிக்கா ராணுவ வீரர்களால் சமீபத்தில் சிறைப்பிடிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

நியூயார்க்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவருக்கும் எதிராக அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அர்ஜென்டினா கோரிக்கை
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் விசாரணை நடத்துவதற்காக அவரை அர்ஜென்டினாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று அமெரிக்காவுக்கு அர்ஜென்டினா வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்சில் உள்ள நீதிமன்றத்தில் மனித உரிமை அமைப்புகள் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணைக்காக நிக்கோலஸ் மதுரோ அர்ஜென்டினாவுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் அந்நாட்டின் நீதிமன்ற நீதிபதி செபாஸ்டியன் ராமோஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |