உக்ரைனில் அமைதி நிலவ இவை உதவாது: அர்ஜெண்டினா
உக்ரைனில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக அமைதியை அடையவும், பேச்சுவார்த்தையை வளர்க்கவும் ரஷ்யா மீதான இந்த பொருளாதார தடைகள் உதவாது என அர்ஜெண்டினாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சாண்டியாகோ கஃபீரோ தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் தொடுத்துள்ள போர் காரணமாக அமெரிக்காவும், ஐரோப்பாவிலும் அதற்கு அப்பால் உள்ள அதன் நட்பு நாடுகளும், ரஷ்யா மீது முன் எப்போதும் இல்லாத வகையில் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
இந்த தடைகளானது எரிபொருள் ஏற்றுமதியை இலக்காக கொண்டுள்ள மாஸ்கோவின் நிதி, வங்கி துறைகள், விண்வெளி மற்றும் விமானத் தொழில்கள் ஆகியவை மீது தான். இந்த நிலையில் அர்ஜெண்டினாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சாண்டியாகோ கஃபீரோ, உக்ரைனில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக அமைதியை அடையவும், பேச்சுவார்த்தையை வளர்க்கவும் ரஷ்யா மீதான இந்த பொருளாதார தடைகள் உதவாது கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 'ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்துள்ள நாடுகளுடன் எங்கள் நாடு சேராது. பியூனஸ் அயர்ஸ் ஒருதலைப்பட்சமான தடைகளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பைக் கூட கொண்டிருக்கவில்லை. இந்த உலகம் அமைதிக்காக அழைக்கும் சவாலை எதிர்கொண்டிருக்கிறது. உக்ரைன் மீதான போரினால் மாஸ்கோ மீது பியூனஸ் அயர்ஸ் பொருளாதாரத் தடைகளை விதிக்காது' என தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற நடந்த வாக்கெடுப்பின் போது விலகிய சில நாடுகளில் அர்ஜெண்டினாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.