இறந்த பெண்ணின் உடலை தின்ற 5 வளர்ப்பு நாய்கள்: துர்நாற்றம் தாங்காமல் அக்கம்பக்கத்தினர் அவதி
பக்கத்து வீட்டுக்காரர்கள் துர்நாற்றம் வீசுவதாக புகார் அளித்ததை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், ஐந்து நாய்களால் பகுதியளவு சாப்பிட்ட நிலையில் இறந்த பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
பெண் உடல் கண்டுப்பிடிப்பு
அர்ஜென்டினாவின் சான்டா ரோசா நகரில் உள்ள ஏர்போர்ட் சுற்றுப்புறத்தில் இருக்கும் சொத்து ஒன்றில் இருந்து ஒரு வாரமாக “துர்நாற்றம்” வீசுவதாக அக்கம்பக்கத்தினர் புகார் அளித்ததை தொடர்ந்து அப்பகுதிக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து டிசம்பர் 31 அன்று துர்நாற்றம் வீசும் வீட்டிற்குள் நுழைந்த பொலிஸார், 67 வயதான அனா இனெஸ் டி மரோட்டின்(Ana Inés de Marotte) என்ற பெண் இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர், மேலும் அனா இனெஸ் டி மரோட்டின் உடல் அவரது ஐந்து நாய்களால் பகுதியளவு உண்ணப்பட்ட நிலையில் இருப்பதையும் கண்டுப்பிடித்தனர்.
Supplied
இன்போபிகோ தளத்தின்படி , மரோட் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டார், ஆனால் சாண்டா ரோசா சானடோரியத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அன்றே விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து வீட்டிற்கு திரும்பிய மரோட், ஒரு வாரத்திற்குப் பிறகு அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்.
ஊடக அறிக்கைகள்
மரோட் குறித்து உள்ளூர் பத்திரிகையான கார்டெஸ், அந்த பெண் குறிப்பிட்ட மருத்துவ நிலைக்கு சிகிச்சையளிப்பதற்காக சாண்டா ரோசா சானடோரியத்திற்குச் சென்றதாகவும், நகரத்தில் உறவினர்கள் இல்லாமல் தானே சுயமாக மருத்துவமனையில் அனுமதி செய்து கொண்டதாக தெரிவித்துள்ளது.
Supplied
பாதிக்கப்பட்டவரின் வக்கீல் Óscar Alfredo Cazenave, மரோட் மாரடைப்பு காரணமாக இறந்தார் என்பதையும், அவரது மரணத்திற்குப் பிறகு நாய்கள் அவரது முகம் மற்றும் காதுகளின் ஒரு பகுதியை சாப்பிட்டுவிட்டன என்பதையும் உறுதிப்படுத்தினார்.
Supplied