பெண் அழகியல் நிபுணரை 15 முறை குத்திக் கொன்ற இளைஞர்! விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி பின்னணி
அமெரிக்காவில் அழகியல் நிபுணரான பெண்ணொருவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர், ஏற்கனவே குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறை சென்றவர் என தெரிய வந்துள்ளது.
கொடூர கொலை
அரிசோனாவில் கடந்த வாரம் நடைபயணப் பாதையில் இளம்பெண்ணொருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்திருந்தார். 29 வயதான லாரன் ஹெய்க் என்ற அப்பெண் அழகியல் நிபுணர் என்பது பின்னர் தெரிய வந்தது.
சியோன் வில்லியம் டீஸ்லி என்ற 22 வயது இளைஞர், லாரனை பின்தொடர்ந்து சென்று அவரது மார்பு மற்றும் முதுகில் 15 முறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
கண்காணிப்பு கமெராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குறித்த 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் ஏற்கனவே குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என்பது தெரிய வந்தது.
சிறை தண்டனை பெற்றவர்
கொடிய ஆயுதத்தைக் கொண்டு கொள்ளையடித்தது, ஒழுங்கீன நடத்தை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஆகிய குற்றங்களுக்காக, டீஸ்லிக்கு 2020யில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் நவம்பர் மாதம் அவர் விடுவிக்கப்பட்டார். சமீபத்தில் டீஸ்லி பணிபுரிந்த இடத்தில் பெண் ஊழியர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதற்காகவும், கடையில் திருடியதற்காகவும் பணிநீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸார் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில், தனது தகுதிகாண் காலத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள டீஸ்லி, கொலை குற்றத்திலும் ஈடுபட்டுள்ளதால் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறப்படுகிறது.