ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்
ரஞ்சிக் கிண்ணத் தொடரில் கர்நாடகா அணிக்காக விளையாடி வரும் கருண் நாயர் 174 ஓட்டங்கள் குவித்தார்.
கருண் நாயர்
ஷிமோகாவில் கர்நாடகா, கோவா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கிண்ணத் தொடர் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. 
கர்நாடக அணி தனது முதல் இன்னிங்சில் 371 ஓட்டங்கள் குவித்தது. கருண் நாயர் (Karun Nair) ஆட்டமிழக்காமல் 3 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 174 ஓட்டங்கள் எடுத்தார்.
ஷ்ரேயாஸ் கோபால் 57 ஓட்டங்களும், அபினவ் மனோகர் 37 ஓட்டங்களும், விஜய்குமார் 31 ஓட்டங்களும் எடுத்தனர்.
சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் 29 ஓவர்கள் வீசிய அவர் 100 ஓட்டங்கள் கொடுத்தார்.
மேலும் வாசுகி கௌசிக் 3 விக்கெட்டுகளும், தர்ஷன் மிசல் 2 விக்கெட்டுகளும், விஜேஷ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய கோவா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 28 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |