3 விக்கெட்டுகள் வீழ்த்தி..வெற்றிபெற வைத்த அர்ஜுன் டெண்டுல்கர்: டி20 தொடரில் மிரட்டல் ஆட்டம்
சையத் முஷ்தாக் அலி தொடரில் அர்ஜுன் டெண்டுல்கர் அபாரமான ஆட்டதை வெளிப்படுத்தி வருகிறார்.
அர்ஜுன் டெண்டுல்கர் 3 விக்கெட்டுகள்
கொல்கத்தாவில் நேற்று நடந்த சையத் முஷ்தாக் அலி போட்டியில் கோவா, மத்திய பிரதேசம் அணிகள் மோதின. 
முதலில் களமிறங்கிய மத்திய பிரதேச அணியில், அங்குஷ் (3) மற்றும் ஷிவாங் (0) ஆகியோர் அர்ஜுன் டெண்டுல்கர் (Arjun Tendulkar) பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த ஹர்ஷ் கவாலி 2 ஓட்டங்களிலும், ரஜத் பட்டிதார் 29 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். வெங்கடேஷ் ஐயர் 6 ஓட்டங்களில் இருந்தபோது அர்ஜுன் டெண்டுல்கர் அவரது விக்கெட்டைக் கைப்பற்றினார்.
எனினும், ஹர்பிரீத் சிங் அதிரடியாக 52 பந்துகளில் 80 ஓட்டங்களும், அங்கித் சிங் 34 (13) ஓட்டங்களும் விளாச மத்திய பிரதேச அணி 170 ஓட்டங்கள் குவித்தது. அர்ஜுன் டெண்டுல்கர் 3 விக்கெட்டுகளும், ஹெராம்ப் பரப் 2 விக்கெட்டுகளும், கௌஷிக் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
கோவா வெற்றி
அடுத்து களமிறங்கிய கோவா அணியில் இஷான் கடேகர் 5 ஓட்டங்களிலும், அர்ஜுன் டெண்டுல்கர் 16 (10) ஓட்டங்களும் ஆட்டமிழந்தனர்.
அபினவ் தேஜ்ரானா 55 (33) ஓட்டங்களும், சுயாஷ் பிரபுதேசாய் 75 (50) ஓட்டங்களும் விளாச, கோவா அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |