துடுப்பாட்டத்திலும் மிரட்டிய அர்ஜுன் டெண்டுல்கர்: ரஞ்சி தொடரில் அபார ஆட்டம்
ரஞ்சி கிண்ணத் தொடரில் கோவா அணியில் விளையாடி வரும் அர்ஜுன் டெண்டுல்கர் 47 ஓட்டங்கள் எடுத்தார்.
கருண் நாயர் 174 ஓட்டங்கள்
ஷிமோகாவில் கர்நாடகா மற்றும் கோவா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி டெஸ்ட் நடந்து வருகிறது.
கர்நாடகா அணி முதல் இன்னிங்ஸில் 371 ஓட்டங்கள் குவித்தது. 
கருண் நாயர் (Karun Nair) ஆட்டமிழக்காமல் 174 ஓட்டங்கள் எடுத்தார். பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய கோவா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 190 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்த கோவா, 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் என தடுமாறியபோது தர்ஷன், லலித் நங்கூர ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 
அர்ஜுன் டெண்டுல்கர்
தர்ஷன் மிசல் 84 பந்துகளில் 12 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, லலித் யாதவ் 96 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 115க்கு 6 ஆக இருந்தது.
பின்னர் அர்ஜுன் டெண்டுல்கர் கர்நாடகா பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.
122 பந்துகளை எதிர்கொண்ட அர்ஜுன் டெண்டுல்கர் (Arjun Tendulkar), 1 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |