145 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: 585 ஓட்டங்கள் விளாசிய எதிரணி
ரஞ்சிக் கிண்ணத் தொடரின் கோவா அணிக்கு எதிரான போட்டியில் சௌராஷ்டிரா அணி 585 ஓட்டங்கள் குவித்தது.
585 ஓட்டங்கள்
ராஜ்கோட்டில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் கோவா மற்றும் சௌராஷ்டிரா அணிகள் விளையாடி வருகின்றனர். 
முதல் இன்னிங்ஸை ஆடிய சௌராஷ்டிரா அணி 150 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 585 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
ப்ரேரக் மன்கத் (Prerak Mankad) 155 ஓட்டங்களும், சம்மர் கஜ்ஜர் (Sammar Gajjar) 116 ஓட்டங்களும் எடுத்தனர்.
சொதப்பிய அர்ஜுன் டெண்டுல்கர்
ஜே கோஹில் (Jay Gohil) 68 ஓட்டங்களும், ஹெத்விக் கொடாக் (Hetvik Kotak) ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களும் விளாசினர்.
கோவா அணியின் தரப்பில் தர்ஷன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மோஹித், கௌஷிக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அர்ஜுன் டெண்டுல்கர் (Arjun Tendulkar) இம்முறை கடுமையாக சொதப்பினார். 29 ஓவர்கள் வீசிய அவர் 2 ஓவர்கள் மெய்டன் செய்து, 145 ஓட்டங்கள் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே சாய்த்தார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |