ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் இரண்டு இன்னிங்ஸிலும் சொதப்பல்
மத்திய பிரதேஷ் அணிக்கு எதிரான ரஞ்சி டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் அர்ஜுன் டெண்டுல்கர் துடுப்பாட்டத்தில் சொதப்பினார்.
பிரபுதேசாய் 65 ஓட்டங்கள்
கோவா கிரிக்கெட் அஸோசியேஷன் அகாடமி மைதானத்தில் மத்திய பிரதேஷ் மற்றும் கோவா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. 
கோவா அணி முதல் இன்னிசில் 284 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. பிரபுதேசாய் 65 ஓட்டங்களும், தீப்ராஜ் 51 ஓட்டங்களும் எடுத்தனர். சரண்ஷ் ஜெயின் 4 விக்கெட்டுகளும், குமார் கார்த்திகேயா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
மத்திய பிரதேஷ் அணி முதல் இன்னிங்சில் 187 ஓட்டங்களுக்கு சுருண்டது. சரண்ஷ் ஜெயின் 48 ஓட்டங்களும், ரிஷாப் சவுகான் 43 ஓட்டங்களும் எடுத்தனர். கௌஷிக் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
சொதப்பிய அர்ஜுன் டெண்டுல்கர்
பின்னர் இரண்டாவது இன்னிங்சில் 230 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அபினவ் 69 ஓட்டங்களும், லலித் யாதவ் 42 ஓட்டங்களும் எடுத்தனர். குமார் கார்த்திகேயா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் அர்ஜுன் டெண்டுல்கர் 1 ரன்னில் அவுட் ஆனார். இரண்டாவது இன்னிங்ஸில் டக்அவுட் ஆகி சொதப்பினார்.
எனினும் பந்துவீச்சில் 34 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இதில் 2 ஓவர்கள் மெய்டன்கள் ஆகும். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |