ஐபிஎல்லில் கிடைக்காத வாய்ப்பு..டி20 மும்பையில் வியக்க வைத்த அர்ஜுன் டெண்டுல்கர்
டி20 மும்பை தொடரில், ARCS அந்தேரி அணியில் விளையாடி வரும் அர்ஜுன் டெண்டுல்கர் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த டி20 மும்பை போட்டியில், ARCS அந்தேரி மற்றும் சோபோ மும்பை ஃபால்கன்ஸ் அணிகள் மோதின.

முதலில் ஆடிய சோபோ மும்பை ஃபால்கன்ஸ் அணி 18.2 ஓவர்களில் 126 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆத்யா தார் 39 பந்துகளில் 59 ஓட்டங்கள் விளாசினார். ஷிவம் தூபே மற்றும் அஜய் மிஸ்ரா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய ARCS அந்தேரி 14 ஓவர்களில் 127 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. திவ்யான்ஷ் 50 (33) ஓட்டங்களும், பிரக்னேஷ் 26 (17) ஓட்டங்களும் எடுத்தனர்.
இப்போட்டியில் ARCS அந்தேரி அணிக்காக விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர் 3 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் வீழ்த்தினார். தனது ஓவரில் வேந்தாந்த் கோர் அடித்த அவரே கேட்ச் செய்தார்.

அதேபோல் துடுப்பாட்டத்தில் வெற்றிக்கான ரன்னை சிக்ஸர் அடித்து மிரட்டினார். இதன்மூலம் பார்வையாளர்களை அவர் ஈர்த்தார்.
முன்னதாக ஐபிஎல் 2026 தொடரில் கடைசி போட்டியில் மட்டுமே விளையாட அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கிடைத்தது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |