2 மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பம்! 3வது பெண்ணுடன் மாலையும் கழுத்துமாக வந்து நின்ற கணவன்
பிரபல யூ-ட்யூபர் அர்மான் மாலிக் தனது இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்திருப்பதை சமீபத்தில் தெரிவித்த நிலையில் மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக கூறி இரண்டு மனைவிகளுக்கு கிலியை ஏற்படுத்தினார்.
ஒரே நேரத்தில் 2 மனைவிகளும் கர்ப்பம்
அர்மான் மாலிக், பாயல் மாலிக், கிருத்திகா மாலிக ஆகிய இரு பெண்களை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். கடந்த மாதம், தனது இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்திருப்பதாக அர்மான் பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவில் இரண்டு மனைவிகளும் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்தார். இந்த நிலையில் அர்மான் நேற்று தனது வீட்டிற்கு மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் மாலையும் கழுத்துமாக வந்தார். பின்னர் அவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக கூற இரண்டு மனைவிகளும் அதிர்ச்சியாகி கணவருடன் வாக்குவாதம் செய்ய தொடங்கினர்.
மூன்றாவது திருமணமா?
ஒருகட்டத்தில் விளையாட்டிற்கு அப்படி சொன்னேன், மூன்றாவது திருமணம் எல்லாம் செய்யவில்லை என்றார் அர்மான். ஆனால் இதை ஏற்காத இரண்டு மனைவிகளும் உங்களை வீட்டை விட்டு வெளியேற்றுவோம் என கோபமடைந்தனர்.
இந்த வீடியோவை பார்த்த பலரும் இந்த மாதிரியான சூழலில் வளர போகும் குழந்தைக்காக நாங்கள் வருத்தப்படுகிறோம் என பதிவிட்டுள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.