கொலம்பியாவில் 25 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள ஆயுத கும்பல்: பல்பொருள் அங்காடியில் பரபரப்பு
Armed group hold 25 Hostages Inside Supermarket in Colombia: கொலம்பியாவில் ஆயுத கும்பல் ஒன்று 25 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள ஆயுத கும்பல்
கொலம்பியாவின் வடக்கு கடற்கரை நகரமான கார்த்தகேனா-வில்(Cartagena) உள்ள பல்பொருள் அங்காடி கடையில் ஆயுதம் ஏந்திய மர்ம கும்பல் ஒன்று அங்கிருந்த 25 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணம் கொண்டு செல்லும் கவச வாகனத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்த முகமூடி அணிந்த ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள், அந்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து அருகிலுள்ள பல்பொருள் அங்காடிக்குள் புகுந்து பதுங்கி கொண்டுள்ளனர்.
இந்த தகவலை அந்நாட்டின் ஜனாதிபதி de la Espriella உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் ஆரம்பத்தில் 30 பேர் வரை பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் 5 வயதான பெண்களை விடுவித்துள்ளனர்.
சம்பவ இடத்தை சுற்றி பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து வரும் நிலையில், குற்றவாளிகளை பிடிக்க முழு அளவிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி de la Espriella உறுதியளித்துள்ளார்.
சம்பவ இடத்தை சுற்றி சிறப்பு படைப்பிரிவுகள் உட்பட பல்வேறு பாதுகாப்பு படை பிரிவினர் அனைவரும் தற்போது களமிறக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.