இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை... இத்தாலி மற்றும் Leonardo மீது வழக்கு
ஏழு இத்தாலிய சமூகக் குழுக்கள், அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் ஆயுத உற்பத்தியாளர் லியோனார்டோ நிறுவனம் மற்றும் இத்தாலிய அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளன.
ரத்து செய்ய வேண்டும்
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்கும் வழங்குவதற்கும் முன்னெடுக்கப்பட்டுள்ள எந்தவொரு ஒப்பந்தத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் அதில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாத இறுதியில் ரோமில் உள்ள நீதிமன்றத்தில் தொடர்புடைய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தியாளர்களில் ஒருவரான லியோனார்டோ,
இஸ்ரேலிய இராணுவத்திற்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருவதுடன், இத்தாலிய அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டத்திற்கு எதிராகவும் செயல்பட்டுள்ளது என அந்த 7 குழுக்களும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
மேலும், மேற்குக் கரையிலும் காஸாவிலும் இஸ்ரேல் இராணுவ ஆக்கிரமிப்பையும், வெளிநாட்டு கூட்டாளிகளால் வழங்கப்படும் ஆயுதங்களால் முறையான இனவெறியையும் செயல்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், ஆயுத ஏற்றுமதி தொடர்பான அனைத்து சட்டங்களுக்கும் இணங்குவதாகவும், நீதிமன்றத்தில் தங்களது நிலைப்பாட்டைப் பாதுகாக்க இருப்பதாகவும் குறிப்பிட்டு லியோனார்டோ நிறுவனம் அந்த வழக்கை புறந்தள்ளியது.

பொதுமக்களுக்கு எதிராக
இத்தாலிய சட்டத்தின் கீழ், போர் தொடுக்கும் நாடுகளுக்கும், சர்வதேச மனித உரிமைகளை மீறுவதாகக் கருதப்படும் நாடுகளுக்கும் ஆயுத ஏற்றுமதி தடைசெய்யப்பட்டுள்ளது. 2023ல், காஸாவில் போர் உச்சம் பெற்று வருவதால், இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்துவதாக இத்தாலி அறிவித்தது.
பாலஸ்தீனப் பகுதியில் பொதுமக்களுக்கு எதிராக ஆயுதங்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், முன்னர் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சர் கைடோ குரோசெட்டோ தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், செப்டம்பர் மாத இறுதியில், லியோனார்டோ தலைமை நிர்வாகி ராபர்டோ சிங்கோலானி, போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலுக்கு புதிய ஏற்றுமதி உரிமங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறினார்.
மேலும், ஆயுதம் ஏந்தாத பயிற்சி விமானங்களுக்கான இரண்டு நீண்டகால பராமரிப்பு ஒப்பந்தங்களுக்கு மட்டுமே இஸ்ரேலுடன் உறவு நீடிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |