ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.., நெல்சன் மனைவி அனுப்பிய ரூ.75 லட்சம்
நெல்சன் மனைவியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.75 லட்சம், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனின் வங்கி கணக்கிற்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
போனில் பேசிய நெல்சன் மனைவி
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 -ம் திகதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆஜரான கூலிப்படையினர், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி வாங்கவே கொலை செய்தோம் என்று தெரிவித்தனர்.
இந்த வழக்கில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பாக சமீபத்தில், ரவுடி நாகேந்திரன் மகனும் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகியுமான அஸ்வத்தாமனை பொலிஸார் கைது செய்தனர்.
மேலும், பல ரவுடிகள் இந்த வழக்கில் தொடர்பில் இருக்கலாம் என்று பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, வேலுர் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனை பொலிஸார் கைது செய்த நிலையில், தற்போது வரை மொத்தம் 23 பேர் கைதாகியுள்ளனர்.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வந்த நிலையில் 24 -வது நபராக பொலிஸார் அவரை கைது செய்தனர்.
பின்னர், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். அவரை செப். 2-ம் திகதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் என்பவருடன் தொலைபேசியில் மோனிஷா பேசியதாக தகவல் வெளிவந்த நிலையில் பொலிஸார் விசாரணை செய்துள்ளனர்.
ரூ.75 லட்சம் பரிமாற்றம்
இந்நிலையில், நெல்சன் மனைவியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.75 லட்சம் மொட்டை கிருஷ்ணன் என்பவரின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், இருவரும் சென்னை சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சந்தித்துள்ளதும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆனால், இந்த பணமானது வழக்கு தொடர்பாகவும் நண்பர் என்ற முறையிலும் பணம் அனுப்பியதாக நெல்சன் மனைவி மோனிஷா விளக்கம் அளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |