உக்ரைனை மொத்தமாக முடித்துவிடுவோம்... புடினுக்கு இராணுவ தளபதிகள் அழைப்பு
புடின் எதிர்பார்த்ததுபோல உக்ரைனை எளிதாக கைப்பற்ற முடியாததால் விரக்தியடைந்துள்ள ரஷ்ய இராணுவத் தளபதிகள், உக்ரைன் மீது முழுமையாக போர் அறிவிக்கும்படி புடினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.
பிப்ரவரி மாத இறுதியில் உக்ரைனை ஊடுருவும்போது, தாங்கள் உக்ரைன் மீது போர் தொடுப்பதாகக் கூறாமல், உக்ரைனிலிருந்து நாஸிக்களை அகற்றுவதற்காகவும், உக்ரைனை இராணுவமயமற்றதாக்குவதற்காகவும் சிறப்பு இராணுவ ஆபரேஷன் ஒன்றை மேற்கொள்வதாகத்தான் அறிவித்தார் புடின்.
அதற்குக் காரணம், எளிதாக உக்ரைனைக் கைப்பற்றிவிடலாம் என அவரும் அவரது இராணுவத் தளபதிகளும் போட்ட தப்புக் கணக்குதான்.
ஆனால், கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகியும் ரஷ்யாவால் உக்ரைனை அல்ல, உக்ரைனின் தலைநகரைக் கூட கைப்பற்ற முடியாததால், விரக்தியடைந்துள்ள ரஷ்ய இராணுவத் தளபதிகள், உக்ரைன் மீடு முழுமையாக போர் தொடுக்க புடினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.
இரண்டாம் உலகப்போரில் நாஸிக்களை வென்றதன் நினைவாக ரஷ்யாவில் மே மாதம் 9ஆம் திகதி வெற்றி விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. அன்று, உக்ரைன் மீதான வெற்றியை அறிவிக்க புடின் திட்டமிட்டிருந்ததாக நிபுணர்கள் சிலர் தெரிவிக்கிறார்கள்.
ஆனால், புடின் நினைத்ததுபோல உக்ரைனைக் கைப்பற்ற முடியாததால், மே 9 அன்று, உக்ரைன் மீது முழுமையாக போர் தொடுப்பது குறித்து அறிவிப்பு வெளியிடலாம் என பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலரான Ben Wallace தெரிவித்துள்ளார்.
அத்துடன், நேட்டோ அமைப்பின் முன்னாள் தலைவரான Richard Sherriffம், மேற்கத்திய நாடுகள் மோசமான விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என எச்சரித்துள்ளார்.