110 ராணுவ வீரர்களுடன் பறந்த விமானம் தரையில் விழுந்து விபத்து: கொலம்பியாவில் பரபரப்பு
கொலம்பியாவில் இராணுவ வீரர்களுடன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராணுவ விமானம் விபத்து
கொலம்பியாவின் தெற்கு அமேசான் மலைப்பகுதியில் 110 ராணுவ வீரர்களுடன் பறந்த இராணுவ போக்குவரத்து விமானம் திடீரென விபத்துக்குள்ளாகி இருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
பெரு நாட்டின் எல்லை பகுதிக்கு அருகில் அமைந்துள்ள புவெர்ட்டோ லெகுய்சாலோ(Puerto Leguizamo) விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் இந்த விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது.

மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் Lockhead Martin-130 Hercules ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மீட்புப் பணிகள் தீவிரம்
விமான விபத்தை தொடர்ந்து, மீட்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ராணுவ பிரிவினர் சம்பவ இடத்திற்கு ஏற்கனவே சென்றடைந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை இந்த சம்பவத்தில் யாரும் உயிரிழந்து உள்ளனரா? காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்த எந்தவொரு துல்லியமான தகவலும் வெளிவரவில்லை.
Con profundo dolor informo que un avión Hércules de nuestra @FuerzaAereaCol sufrió un trágico accidente mientras despegaba de Puerto Leguízamo (Putumayo), cuando transportaba tropas de nuestra Fuerza Pública.
— Pedro Arnulfo Sanchez S. Orgullosamente Colombiano (@PedroSanchezCol) March 23, 2026
Unidades militares ya se encuentran en el lugar de los hechos; sin…
கொலம்பியா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பெட்ரோ அனுல்கோ சான்செஸ், இந்த துயரமான விமான விபத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அமைச்சர் சான்செஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொலம்பிய அதிபர் குஸ்தாவோ பெட்ரோ, இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டு இருக்க கூடாது என்ற விருப்பத்தை X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |