நாடாளுமன்றத்திற்கு மேல் பறந்து பீதியை கிளப்பிய இராணுவ விமானம்! அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம்
அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு மேலே இரன்டுவ விமான அயொன்று பறந்ததால், தாக்குதல் நடத்தப்படுவதாக பீதியடைந்து, வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாஷிங்டனில் அமெரிக்க கேபிடல் என்று அழைக்கப்படும் நாடாளுமன்ற வளாகத்திற்கு மேலே இராணுவ ஸ்கை டைவர்ஸை ஏற்றிச் செல்லும் இராணுவ விமானம் ஒன்று பிறந்துள்ளது.
இதனைப் பார்த்த கேபிடல் காவல்துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தப்படுவதாக தவறான எச்சரிக்கையை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து, வளாகத்தில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், பார்வையாளர்கள் என அனைவரையும் கேபிடல் பொலிஸார் அவசர அவசரமாக பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றினர்.
தெரியவந்த உண்மை
நேற்று மாலை 6.30 மணியளவில் நடந்த இந்த சமபவத்தில் அமெரிக்க கேபிடல் காவல்துறை ஒரு இராணுவ விமானத்தை அச்சுறுத்தல் என்று தவறாக அடையாளம் கண்டுள்ளது.
உண்மையில், அந்த விமானம் அமெரிக்க இராணுவத்தின் Golden Knights demonstration குழுவை பாராசூட் மூலம் அருகிலுள்ள வாஷிங்டன் நேஷனல்ஸ் விளையாட்டிற்கு ஏற்றிச் சென்றுள்ளது தெரியவந்தது.
அமெரிக்க கேபிடல் காவல்துறைக்கு இது குறித்து அறிவிக்கப்படவில்லை. சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, கேபிடல் காவல்துறை எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதைக் கண்டறிந்தது.
சொந்த வீட்டை குண்டுவீசி தகர்க்க சொன்ன உக்ரைனிய கோடீஸ்வரர்! கூறிய காரணம்..
சபாநாயகர் நான்சி பெலோசி குற்றச்சாட்டு
இதனைத் தொடர்ந்து, தேவையற்ற பீதியை ஏற்படுத்தியதற்காக சபாநாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷனை (FAA) குற்றம் சாட்டினார்.
"முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஃப்ளைஓவர் நேஷனல்ஸ் ஸ்டேடியம் பற்றி கேபிடல் காவல்துறைக்கு தெரிவிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் வெளிப்படையாகத் தவறியது மூர்க்கத்தனமானது மற்றும் மன்னிக்க முடியாதது" என்று பெலோசி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போரில் வெற்றிக்கு நாள் குறித்த ரஷ்யா: அதிக துருப்புகளை களமிறக்க திட்டம்
இந்த வெளிப்படையான அலட்சியத்தால் ஏற்பட்ட தேவையற்ற பீதி, கடந்த ஆண்டு ஜனவரி 6 அன்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத உறுப்பினர்கள், ஊழியர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பெலோசி கூறினார். மேலும், நடந்த தவறுக்கு காங்கிரஸ் FAA அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கூறினார்.
NEW CNN IMAGES from @abdallahcnn of US Army Golden Knights jump plane that multiple sources tell us triggered tonight’s false alarm evacuation of the US Capitol. pic.twitter.com/GthG3yvZMm
— Pete Muntean (@petemuntean) April 20, 2022
கேபிடல் கலவரம் மற்றும் 9/11 தாக்குதல்களின் அதிர்ச்சி இன்னும் அனைவரின் நினைவுகளிலும் பொறிக்கப்பட்டுள்ளதால், வளாகத்தில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.