176 பேர் பயணித்த உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்திய இராணுவம்! (உலக செய்திகளின் தொகுப்பு)
அணுவாயுத சோதனைகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகள் என்பவற்றின் மூலம் வடகொரியா தனது அயல் நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றது.
சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் பொதுமக்கள் 200 பேர் இதுவரை பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லக்ஸம்பர்க் நாட்டில் கார்கோலக்ஸ் விமானம் தரையிறங்கும் போது அதன் என்ஜின் ஓடுதளத்தில் உரசிய நிலையில் விமானி சாமர்த்தியமாகச் செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி பயணிகள் விமானம் ஒன்று ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது,அதில் உக்ரைனுக்கு சொந்தமான இந்த விமானத்தில் 176 பேர் பயணம் செய்தனர்.
கனடாவின் றொரன்டோவின் பியர்சன் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரஸ்ய விமானத்தை சுவீகரிக்கப் போவதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்துகொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.