பொதுமக்களை மொத்தமாக வெளியேற செய்த ராணுவம்: வெளிவரும் பரபரப்பு பின்னணி

army civilians evacuate
By Arbin Aug 04, 2021 05:15 AM GMT
Report

தலிபான் தீவிரவாதிகளால் முற்றுகையிடப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் நகரத்தை காலி செய்யுமாறு குடியிருப்பாளர்களை ராணுவம் வலியுறுத்தியுள்ளது.

தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக இராணுவம் மூன்று நாட்கள் முன்னெடுத்த கடும் சண்டைக்குப் பிறகு ஒரு பெரிய தாக்குதலுக்கு ராணுவம் தயார் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் Lashkar Gah நகரை கைப்பற்றும் நோக்கில் தலிபான் தீவிரவாதிகள் முனைப்பு காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையிலேயே ராணுவம் இந்த அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

செவ்வாய்க்கிழமை மதியத்திற்கு மேல் தலிபான் தீவிரவாதிகள் காபூல் நகரில் கடுமையான தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சர் Bismillah Mohammadi குடியிருப்புக்கு அருகாமையில் குண்டு வெடித்துள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் ஆள் அபாயம் ஏதும் ஏற்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு படைகள் மே மாதத்தில் திரும்பப் பெறுவதற்கான கடைசி நடவடிக்கைகளை தொடங்கியதிலிருந்து, தலிபான்கள் கிராமப்புற ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதியைக் கைப்பற்றினர்.

ஆனால் தற்போது மாகாண தலைநகரங்களைக் கைப்பற்றுவதில் கவனம் செலுத்துகின்றனர் எனவும், அங்கு அவர்கள் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்கின்றனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Lashkar Gah நகரில் கடும் மோதல் நடைபெறுவதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் 40 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, இராணுவம் முக்கிய தாக்குதலை முன்னெடுக்க இருப்பதால் பொதுமக்கள் உடனடியாக நகரில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சுமார் 200,000 மக்கள் இதனால் வெளியேற நேரிடும் என ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது. குடியிருப்புகளை விட்டு வெளியேறுவது என்பது கடுமையானது என்பது தங்களுக்கு தெரியும் எனவும், ஆனால் சில நாட்கள் மட்டும் நகரை விட்டு பாதுகாப்பாக வெளியேறி ஒத்துழைப்பு தரும்படி ராணுவம் பொதுமக்களிடன் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், இதுபோன்ற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டதில் பொதுமக்களிடம் ராணுவம் மன்னிப்பும் கோரியுள்ளது. தலிபான் தீவிரவாதிகள் எங்கிருந்தாலும் தாக்குதலை தொடுப்போம் என குறிப்பிட்டுள்ள ராணுவம், ஆப்கானிஸ்தானில் தலிபான்களை மொத்தமாக ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என தெரிவித்துள்ளது.     

மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US