பால் விற்பனை செய்தவரின் மகன் இன்று 7000 கோடிக்கு சொந்தக்காரர்! சாதித்து காட்டிய தமிழன்
மருத்துவத்துறையில் முக்கிய மாற்றங்களையும், புதிய வர்த்தகத்தையும் கொண்டு வந்து சாதித்துக் காட்டிய கோவையைச் சேர்ந்த வேலுமணி, இன்று 7000 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
யார் இந்த வேலுமணி?
தமிழக மாவட்டம் கோயம்புத்தூரின் புதூரைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி, இவரது மனைவி சமயம்மாள். இந்த தம்பதிக்கு பிறந்த 4 பிள்ளைகளில் ஒருவர் தான் வேலுமணி.
ஆரோக்கியசாமி தன்னிடம் சொந்தமாக நிலம் இல்லாத காரணத்தால், விவசாய பணிகள் செய்ததுடன் பால் விற்பனை செய்து பிள்ளைகளை வளர்த்தார்.
இவ்வாறான சூழ்நிலையில் வளர்ந்த வேலுமணி பாடசாலை படிப்பை முடித்தவுடன், 1978ஆம் ஆண்டில் B.Sc பட்டப்படிப்பை முடித்தார். அப்போது அவருக்கு வயது 19.
அதனைத் தொடர்ந்து ஜெமினி கேப்சியூல் எனும் சிறிய பார்மா நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். ஆனால் அடுத்து 3 ஆண்டுகளில் அந்நிறுவனம் மூடப்பட்டது. எனினும் மனம்தளராத வேலுமணி மும்பைக்கு சென்று, அங்குள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் Lab Assistant ஆக பணிக்கு சேர்ந்தார்.
பதவி உயர்வு
அங்கு பணியாற்றிக் கொண்டே 1985ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன் பின் 1995ஆம் ஆண்டில் தைராய்டு பயோகெமிஸ்டரி பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றார் வேலுமணி.
மும்பை பல்கலைக்கழகத்தில் அவர் இந்த பட்டத்தைப் பெற்ற நிலையில், இடைப்பட்ட காலத்தில் Lab Assistant பதவியில் இருந்து Scientist ஆக பதவி உயர்ந்தார்.
1996ஆம் ஆண்டில் தைராய்டு பரிசோதனை ஆய்வகத்தை அமைக்க முடிவு செய்த வேலுமணி, Thyrocare நிறுவனத்தை தொடங்கினார். அதனை விரிவுபடுத்த விரும்பிய அவர், Franchisee மொடலை அறிமுகம் செய்தார்.
எனினும் இந்திய பார்மா துறையில் பெரும் மாற்றத்தை உருவாக்கும் நிறுவனம் ஒன்றை துவங்க முக்கிய முடிவு ஒன்றை எடுத்தார் வேலுமணி. அதாவது, அவரது மனைவியும் சுமதியுடன் சேர்ந்து அவரும் தனது பணியைத் துறந்தார்.
அதன் பின்னர் நேபாளம், வங்கதேசம், மத்திய கிழக்கு நாடுகள் என மொத்தம் 1,122 Thyocare கிளைகளை வேலுமணி நிறுவினார்.
7000 கோடிக்கு சொந்தக்காரர்
வேலுமணி 2021யில் தனது நிறுவனத்தின் 66.1 சதவீத பங்குகளை PharmEasyயின் தாய் நிறுவனமான API Holdings நிறுவனத்திற்கு விற்பனை செய்தார்.
தற்போது இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ பரிசோதனை நிறுவனமாக இது உள்ளது. இதன்மூலம், விவசாய குடும்பத்தில் பிறந்து 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்திற்கு சொந்தக்காரராக உருவெடுத்துள்ளார் வேலுமணி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |