இரவுகள் வீணாகிறது.. திருமணம் செய்ய மணப்பெண்ணை ஏற்பாடு செய்யுங்க! சர்ச்சையான ஆசிரியரின் கடிதம்
மத்திய பிரதேசத்தில் தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வராதது குறித்து நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் அலுவலருக்கு ஆசிரியர் ஒருவர் அனுப்பிய கடிதம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.
பயிற்சி வகுப்புக்கு வராத ஆசிரியர்
இந்திய மாநிலம், மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17 -ம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் எனவும், டிசம்பர் 3 -ம் திகதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தேர்தல் பணிகளை விரைவாக செய்வதற்கு ஏதுவாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பானது ஒக்டோபர் 16, 17 -ம் திகதிகளில் நடைபெறுவதற்கு மாநில தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்திருந்தது.
அப்போது, அனைத்து ஆசிரியர்களும் பயற்சி வகுப்பில் கலந்து கொண்ட நிலையில், சமஸ்கிருத ஆசிரியர் அகிலேஷ் மட்டும் கலந்து கொள்ளவில்லை.
இதனால், ஒக்டோபர் 17 -ம் திகதி வகுப்பில் கலந்து கொள்ளாதது குறித்து தேர்தல் அலுவலர், அந்த ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
மணப்பெண் ஏற்பாடு
இந்த நோட்டிஸுக்கு பதிலளிக்கும் விதமாக ஒக்டோபர் 31 -ம் திகதி அகிலேஷ் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அவர் அந்த கடிதத்தில், "என் இரவுகள் முழுவதும் துணை இல்லாமல் வீணாக செலவிடுகிறேன். எனக்கு முதலில் திருமணம் செய்ய மணப்பெண்ணை ஏற்பாடு செய்யுங்கள்.
வரதட்சணையாக 3.5 லட்சம் ரூபாயை பணமாகவோ அல்லது வங்கி கணக்கிலோ கொடுத்தல் வேண்டும். ஒரு லோன் மூலம் அடுக்குமாடி குடியிருப்பும் எனக்கு கொடுக்க வேண்டும்" என்று எழுதியிருந்தார்.
இதனால், நவம்பர் 2 -ம் திகதி ஆசிரியர் அகிலேஷை சத்னா கலெக்டர் அனுராக் ஷர்மா பணியிடை நீக்கம் செய்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |