விளாடிமிர் புடின் கைது செய்யப்படுவாரா... பதிலளிக்காமல் நழுவும் பிரான்ஸ்
இஸ்ரேலின் பிரதமருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட சர்வதேச கைதாணை மீது பிரான்ஸ் எடுத்துள்ள நிலைப்பாட்டால் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது.
கைது செய்ய வேண்டும்
ஆனால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை இதேபோன்ற கைதாணையின் கீழ் கைது செய்ய பிரான்ஸ் தயாராகுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துள்ளது. கடந்த வாரம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட மூவர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைதாணை பிறப்பித்துள்ளது.
இதனால் பிரான்ஸ் உட்பட அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் முன்னெடுத்துள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில் அந்த மூவரையும் கைது செய்ய வேண்டும். ஆனால், ஐசிசியின் நடவடிக்கைகளில் இருந்து நெதன்யாகுவுக்கு விதிவிலக்கு இருப்பதாக பிரான்ஸ் புதன்கிழமை கூறியது.
மட்டுமின்றி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ஒப்பந்தத்தில் இஸ்ரேல் இணையவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது. முன்னதாக உக்ரைனில் இருந்து நூற்றுக்கணக்கான குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக குறிப்பிட்டு போர்க்குற்றம் செய்ததாக புடினுக்கு எதிராகவும் ஐசிசி கைதாணை பிறப்பித்துள்ளது.
பிரான்சின் நிலைப்பாடு
ரஷ்யாவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற ஒப்பந்தத்தில் இணையவில்லை. இந்த நிலையில், பிரன்சின் வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், கைதாணை தொடர்பில் பிரான்சின் நிலைப்பாடு என்பது புடின் மற்றும் நெதன்யாகுவுக்கும் ஒரேப்போன்றதே என்றார்.
பிரான்சில் விளாடிமிர் புடின் கைதாகும் நிலை உருவாகுமா என்ற கேள்விக்கு, சர்வதேச விதிகளை நாங்கள் கட்டாயம் பின்பற்றுவோம் என்றார். ஆனால் விதிவிலக்கு என்பது சூழ்நிலை மற்றும் எதிர்கொள்ளும் விவகாரத்தைப் பொறுத்தது என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |