இலங்கையில் கைதுகள் தொடரும்..! ஆளும் தரப்பு உறுதி
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கை போல் இன்னும் பல கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அந்நாட்டின் துணை அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் சட்டத்தின் முன் ரணில் விக்ரமசிங்கவும், மற்றவர்களை போலவே நடத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் எதிர்காலத்தில் இதுபோன்ற கைது நடவடிக்கைகள் நடைபெறும் என்றும், பலர் சட்ட விதிகளை எதிர்கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கே இந்த நிலை என்றால் நமக்கு என்ன நடக்கும் என இப்போதே பலர் சிந்தித்திருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் அதே சிந்தனையுடன் இருப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |