பாதி களத்திற்கு வந்த கோல்கீப்பர்! தனியாளாக தாண்டிச்சென்று கோல் அடித்த வீரர்..அதிர்ச்சி தோல்வி
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஆர்செனல் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாயெர்ன் முனிச்சை வீழ்த்தியது.
தலையால் முட்டி கோல்
எமிரேட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் பாயெர்ன் முனிச் மற்றும் ஆர்செனல் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் கார்னரில் இருந்து வந்த பந்ததை, ஆர்செனல் வீரர் ஜூரியன் டிம்பர் தலையால் முட்டி கோலாக மாற்றினார்.
அடுத்த 10 நிமிடங்களில் பாயெர்ன் முனிச் பதிலடி கொடுத்தது. 32வது நிமிடத்தில் பாயெர்ன் வீரர் லென்னார்ட் கார்ல் அபாரமாக செயல்பட்டு கோல் அடித்தார். 
முதல் பாதி 1-1 என சமனில் முடிய, இரண்டாம் பாதியில் ஆர்செனல் அணியே ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் நோனி மடுகே மிரட்டலாக 69வது நிமிடத்தில் கோல் அடித்து அதிர்ச்சி கொடுத்தார்.
நியூயர் செய்த தவறு
அதனைத் தொடர்ந்து, 77வது நிமிடத்தில் பாயெர்ன் முனிச் கோல்கீப்பர் மானுவல் நியூயர் (Manuel Neuer) ஆடுகளத்தில் மையப் பகுதிக்கே வந்துவிட்டார்.
இதனால் அவரை கடந்துவிட்ட கேப்ரியல் மார்ட்டினெல்லி (Gabriel Martinelli) தனியாளாக சென்று எளிதாக கோல் அடித்தார்.
அதன் பின்னர் பாயெர்ன் முனிச் (Bayern Munich) வீரர்கள் எவ்வளவு முயற்சித்தும் பதில் கோல் அடிக்க முடியவில்லை.
இதன்மூலம் ஆர்செனல் (Arsenal) அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாயெர்ன் முனிச் அணியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |