நல்லவேளையாக துண்டிக்கப்படாமல் காப்பாற்றப்பட்ட கால்கள்! வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர் வாழ்வை புரட்டி போட்ட தருணம்: புகைப்படங்கள்
வெளிநாட்டில் இரத்த கட்டியால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட தனது வலது காலை இழக்கும் நிலைக்கு சென்ற இலங்கையருக்கு சரியான நேரத்தில் தரமான சிகிச்சையளிக்கப்பட்டதால் அவரின் கால் துண்டிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த அப்துல் சமத் முகமது ஷலிஹீன் (41) என்பவர் அபுதாபியில் ஐடி நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அப்துல் என் எம் சி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்து வந்த நிலையில் பெருந்தொற்றில் இருந்து குணமாகி கடந்த மாதம் 17ஆம் திகதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஆனால் அன்றைய தினமே அவருக்கு வலது காலில் தாங்க முடியாத அளவுக்கு வலி ஏற்பட்டது. இதன்பின்னர் வாழ்வை புரட்டி போட்ட அந்த தருணம் குறித்து அதிர்ச்சி விலகாமல் அப்துல் கூறுகிறார்.
Image Credit: Supplied
கால் வலி மிக கடுமையாக இருந்தது, இதோடு என் கால் கனமானது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு செல்ல முடிவு செய்தேன். அங்கு சென்ற பின்னர் மருத்துவர்கள் அனைத்து நோயறிதல் ஸ்கிரீனிங் செய்தார்கள். மேலும் நான் வலி நிவாரணிகளை வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பினேன்.
அடுத்த சில மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்து வந்து என்னை அழைத்து சென்று ஐசியூவில் அனுமதித்தனர். அப்போது பரிசோதனை முடிவில், எனது வலது காலில் இரத்த கட்டி போன்ற அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக இரத்த ஓட்டம் குறைந்துவிட்டதாகவும், அது ஆபத்து எனவும் தெரிவித்தனர்.
இதன்பின்னர் தொடர் சிகிச்சைகள் மற்றும் ஆப்ரேஷன் மூலம் தனது காலை மருத்துவர்கள் காப்பாற்றினார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் அப்துல் கூறுகையில், சிகிச்சைக்குப் பிறகு பாதிக்கப்பட்ட மூட்டுகள் கிட்டத்தட்ட 90 சதவீதம் இயல்பான இயக்கத்தை மீண்டும் அடைந்துள்ளது.
என் வலியும் குறைந்துவிட்டது, இப்போது நான் நிம்மதியாக இருக்கிறேன். என் கால் வலியை அலட்சியப்படுத்தாமல் நான் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு விரைந்தேன். எதிர்காலத்தில் கவனமாக இருப்பேன் என கூறியுள்ளார்.
மருத்துவர் ராஜ்தேவ் கூறுகையில், அப்துலுக்கு மது அருந்தும் பழக்கமோ அல்லது புகைபிடிக்கும் பழக்கமோ கிடையாது. அவர் நீரிழிவு நோயாளி, இந்த பிரச்சினையானது Type II நீரிழவு நோயாளிகளுக்கு வரலாம்.
கிட்டத்தட்ட 1.5 அடி நீளம் கொண்ட தமனி உறைவு அப்துலுக்கு காணப்பட்டது. இதுவே நான் பார்த்த மிகப்பெரிய தமனி உறைவு, அதை முழுவதுமாக அகற்ற மூன்று வாரங்களில் இரண்டு முறை ஆஸ்பிரேஷன் செய்யப்பட்டது.
தற்போது அவர் நன்றாக குணமடைந்து வருகிறார் என கூறியுள்ளார்.
Image Credit: Supplied