பேரறிவாளனை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் பயன்படுத்திய சட்டப்பிரிவு 142 என்றால் என்ன?
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரிய வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இன்று (மே 18) இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆளுநர் முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு.
ஆளுநர் முடிவை தாமதப்படுத்தினால், அதனை நீதிமன்றம் பரிசீலனை செய்யலாம். அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142-ஆவது பிரிவை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்கிறது என்று தீர்ப்பளித்தது.
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142 என்றால் என்ன?
நீதிமன்றத் தீர்ப்பாணைகள், ஆணைகள் இவற்றைச் செயலுறுத்துதலும் வெளிக்கொணர்தல் முதலியவை குறித்த ஆணைகளும் ஆகும்.
1, உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தைச் செலுத்துகையில், தன்முன் முடிவுறாநிலையிலுள்ள வழக்கு அல்லது பொருட்பாடு எதிலும் நிறைவுறு நீதி நிலையுறச்செய்வதற்குத் தேவையாகும் தீர்ப்பாணையை வழங்கலாம் அல்லது எதனையும் பிறப்பிக்கலாம்.
அவ்வாறு வழங்கப்பட்ட தீர்ப்பாணை அல்லது பிறப்பிக்கப்பட்ட ஆணை எதுவும், நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டத்தாலோ அதன் வழியாலோ வகுத்துறைக்கப்படும் முறையிலும், அவ்வாறு நாடாளுமன்றம் வகைசெய்யும் வரையில், குடியரத்தலைவர் ஆணையின்வழி வகுத்துரைக்கும் முறையிலும், இந்திய ஆட்சிநிலவரை எங்கணும் செயலுறுத்தத் தகுவது ஆகும்.
2, நாடாளுமன்றத்தால் இதன்பொருட்டு இயற்றப்படும் சட்டம் ஒன்றன் வகையங்களுக்கு உட்பட்டு, உச்ச நீதிமன்றம், இந்திய ஆட்சிநிலவரை முழுவதிலும் எவரையும் தன்முன் வரவழைப்பதற்காக, ஆவணங்கள் எவற்றையும் வெளிக்கொணர்வதற்காக அல்லது முன்னிலைப்படுத்துவதற்காக அல்லது தன்னை அவமதித்த குற்றம் பற்றி விசாரிக்கவோ அது குறித்துத் தண்டனை வதிக்கவோ ஆணை எதனையும் பிறப்பிப்பதற்கான அதிகாரங்கள் அனைத்தையும் உடையது ஆகும்.
இலங்கை நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச!