இலங்கை நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச!
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக சற்று முன்னர் நாடாளுமன்றம் வந்துள்ளார்.
கொழும்பில் மே 9ம் திகதி வன்முறை வெடித்ததை அடுத்து இலங்கையில் பல்வேறு இடங்களில், மகிந்த குடும்ப வீடு உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அரசியல்வாதிகள் பலரின் வீடுகள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
கொழும்பில் இடம்பெற்ற வன்முறையை அடுத்து மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னாள் பிரதமர் மகிந்த குடும்பத்துடன் ஹெலிகாப்டர் மூலம் திருகோணாமலையில் உள்ள கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற துணை சபாநாயகருக்கான ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் கலந்துக்கொள்ளவில்லை.
இந்நிலையில், இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொள்வதற்காக சற்று முன்னர் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றம் வந்துள்ளார்.