மருத்துவ துறையில் கால்பதிக்கும் AI சாட்பாட்: சோதனை முயற்சியில் கூகுள் நிறுவனம்
நோயை கண்டறிதல் மற்றும் நோயாளிகளுக்கான விரைவான வழிகாட்டல் ஆகியவற்றிற்கு உதவிகரமாக இருக்க கூடிய செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை சோதனை முயற்சியாக கூகுள் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.
Med-PaLM-2
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் கால்பதிக்க தொடங்கிவிட்ட சூழ்நிலையில், தற்போது மருத்துவ துறையிலும் தன்னுடைய வரவை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் கூகுள் நிறுவனம் அமெரிக்காவின் மினியெஸ்டோவில் உள்ள மேயோ கிளினிக்-கில் Med-PaLM-2 என்ற செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை சோதனை முயற்சியில் பயன்படுத்தி வருகிறது.
இந்த சாட்பாட் தரவுகளை ஒருங்கிணைப்பது, நோயாளிகளின் மருத்துவ விவரங்களை சுருக்கமாக கூறுவது, மருத்துவ கேள்விகளுக்கு பதிலளிக்க கூடிய மற்றும் அறிகுறிகளை வைத்து சரியான நோயை கண்டறிவது ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சாட்பாட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களுக்கான உதவி
இத்தகைய செயற்கை நுண்ணறிவு சாட்பாட்கள் மருத்துவர்களுக்கு நிகரானது இல்லை என்றாலும், தரவுகள் மற்றும் மருத்துவர்களுக்கான முக்கிய தகவல்களை வழங்கி நோயாளிகளுக்கான சிகிச்சையை விரைவாக வழங்க மருத்துவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த சாட்பாட்களில் சேமிக்கப்படும் நோயாளிகளின் மருத்துவ தரவுகள் என்க்ரிப்ட் செய்யப்படுவதால், அதை சாட்பாட் நிறுவனத்தால் பார்க்க முடியாது என்று கூகுள் தெரிவித்துள்ளது.
ஆனால் இப்போதைக்கு இந்த சாட்பாட்கள் சோதனை முயற்சியில் தான் இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |