ரஷ்ய கவச வாகனங்களை குறிவைத்து துவம்சம் செய்த உக்ரைன் பீரங்கிகள்! முழு வீடியோ காட்சி
ரஷ்யாவின் கவச வாகனங்களை சரமாரியாக பீரங்கி தாக்குதல் நடத்தி உக்ரைன் அழித்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் பிப்ரவரி 24-ம் திகதி தொடங்கிய நிலையில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தப் போரில் உக்ரைன் மட்டுமல்லாமல் ரஷ்யா மற்றும் உலக நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.
போரில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு சரியாக ஈடு கொடுத்து வருகிறது உக்ரைன். அந்த வகையில் ரஷ்யாவின் கவச வாகனங்களை குறி வைத்து உக்ரைன் துவம்சம் செய்துள்ளது.
🇺🇦💥💥Another successful artillery strike on russian invader's armored vehicles, concealed in the woods and troops in Kharkiv oblast.🌿🌿🌿#RussianUkrainianWar #Ukraine
— Eng yanyong (@EngYanyong) June 22, 2022
#StopRussia #StandUpForUkraine pic.twitter.com/cac0RCIjZX
அதன்படி கார்கிவ் பிராந்தியத்தில் ரஷ்ய கவச வாகனங்கள் மீது மற்றொரு வெற்றிகரமான பீரங்கித் தாக்குதலை உக்ரைன் நடத்தியுள்ளது.
காடுகள் மற்றும் மரங்களில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த கவச வாகனங்களையே குறி வைத்து உக்ரைன் பீராங்களில் தாக்குதல் நடத்தின.
இது தொடர்பான வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.