திருமணத்தை அறிவித்த பிக்பாஸ் ஜோடி அருண்- அர்ச்சனா.., எப்போது தெரியுமா?
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசியாக நடந்து முடிந்த 8வது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் முத்துக்குமரன் டைட்டில் வென்றார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர்களுள் அருண் பிரசாத்தும் ஒருவர்.
இவர் பிக்பாஸ் சீசன் 8ல் பைனல் வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பைனலுக்கு முந்தைய வாரம் எலிமினேட் ஆகி வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அருண் பிரசாத் வர முக்கிய காரணமாக இருந்தது அவரது காதலி அர்ச்சனா தான். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.
இதில் அர்ச்சனா கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் டைட்டில் வென்றார்.
பிக்பாஸ் சீசன் 8ன் பேமிலி ரவுண்டின் போது உள்ளே வந்த அர்ச்சனா, அருண் பிரசாத் உடனான காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக, அருண் பிரசாத்தே சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதன்படி வீட்டில் திருமணத்திற்கான பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளதாக கூறிய அவர், இந்த ஆண்டு இறுதிக்குள் அர்ச்சனாவை கரம்பிடிக்க உள்ளதாக அறிவித்திருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |