அவர் ஒரு சூப்பர் ஸ்டார்! சரித் அசலங்கா வியந்து கூறியது யாரை தெரியுமா?
வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்னர், இலங்கை அணித்தலைவர் அசலங்கா சுழற்பந்துவீச்சாளர் ஹசரங்காவை வெகுவாக பாராட்டினார்.
ஹசரங்கா அபாரம்
நேற்று நடந்த ஆசியக் கிண்ணப் போட்டியில், இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.
வணிந்து ஹசரங்கா 4 ஓவர்கள் வீசி 25 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
வெற்றிக்கு பின்னர் பேசிய இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்கா, "இரண்டு ஓவர்கள், இரண்டு மெய்டன்கள் மற்றும் இரண்டு விக்கெட்டுகளுடன் அது ஒரு கனவு தொடக்கமாக இருந்தது. வணிந்து ஹசரங்காவின் முக்கிய ஆயுதம் கூக்லி.
எங்களால் கூட அவரை சரியாகத் தேர்ந்தெடுக்க முடியாது. அவர் ஒரு சூப்பர் ஸ்டார். நாங்கள் 120 ஓட்டங்கள் எடுத்தவுடன் அதை விரைவில் முடிக்க வேண்டும் என்பதை உணர்ந்தோம்.
எங்கள் ரசிகர்களிடமிருந்தும், வங்காளதேச ரசிகர்களிடமிருந்தும் அற்புதமான ஆதரவு கிடைத்தது. எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |