டி20யில் 344 ஓட்டங்கள் குவித்த அணி எது தெரியுமா? டாப் 10 அணிகள் பட்டியல்
டி20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த அணிகள் குறித்து இங்கே பார்ப்போம்.
டி20யில் 300 ஓட்டங்கள்
நேற்று நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 304 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தது.
ஆனால், அதிக ஓட்டங்கள் குவித்த அணிகளின் பட்டியலில் இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்தைதான் பிடித்துள்ளது.
ஏனெனில் முதலிடத்தில் உள்ள அணி ஜிம்பாப்வேதான். காம்பியா (Gambia) அணிக்கு எதிரான போட்டியில் (2024) ஜிம்பாப்வே 4 விக்கெட்டுக்கு 344 ஓட்டங்கள் குவித்தது. சிக்கந்தர் ரஸா 43 பந்துகளில் 133 ஓட்டங்கள் விளாசினார்.
இரண்டாவது இடத்தில் நேபாள அணி உள்ளது. 2023யில் நடந்த ஆசிய போட்டிகள் டி20யில் மங்கோலியா அணிக்கு எதிரான நேபாளம் 3 விக்கெட்டுக்கு 314 ஓட்டங்கள் குவித்தது. குஷால் மல்லா 50 பந்துகளில் 137 ஓட்டங்கள் விளாசினார்.
டி20யில் அதிக ஓட்டங்கள் குவித்த 10 அணிகள்
- ஜிம்பாப்வே - 344/4
- நேபாளம் 314/3
- இங்கிலாந்து - 304/2
- இந்தியா - 297/6
- ஜிம்பாப்வே - 286/5
- இந்தியா - 283/1
- ஆப்கானிஸ்தான் - 278/3
- செக் குடியரசு - 278/4
- நைஜீரியா - 271/4
- மலேசியா - 268/4
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |