பாகிஸ்தானை வீழ்த்தி கம்பீரமாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இலங்கை! கடைசி பந்தில் திரில் வெற்றி
கொழும்பில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பலப்பரீட்சை போட்டி
இலங்கை அணி ஆசியக்கோப்பை இறுதிப்போட்டிக்கு செல்ல பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கியது.
மழை குறுக்கீடு காரணமாக 42 ஓவர்களாக குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 252 ஓட்டங்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியில் குசால் பெரேரா 17 ஓட்டங்களிலும், நிசங்கா 29 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
குசால் மெண்டிஸ் அரைசதம்
அடுத்து கைகோர்த்த குசால் மெண்டிஸ் மற்றும் சதீர சமரவிக்ரமா ஜோடி பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தது. இவர்களது கூட்டணி இரண்டாவது விக்கெட்டுக்கு 100 ஓட்டங்கள் விளாசியது.
அணியின் ஸ்கோர் 177 ஆக இருந்தபோது சமரவிக்ரமா 48 ஓட்டங்களில் அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடி காட்டிய குசால் மெண்டிஸ் 87 பந்துகளில் 91 எடுத்த நிலையில் இப்ஃதிகார் பந்துவீச்சில் ஹரிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
Fifty up for Kusal Mendis, his third in this tournament! ?#SLvPAK #AsiaCup2023 pic.twitter.com/OcjQQDYBQM
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) September 14, 2023
எனினும் நம்பிக்கை நட்சத்திரமாக சரித் அசலாங்கா நிலைத்து நின்று ஆட, கேப்டன் ஷானகா, தனன்செய டி சில்வா மற்றும் வெல்லாலகே ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
கடைசி ஓவரில் பரபரப்பு
இதனால் கடைசி ஓவரில் (42வது ஓவர்) இலங்கையின் வெற்றிக்கு 8 ஓட்டங்கள் தேவை என்ற நிலை உருவானதால், ஆட்டம் உச்சகட்ட பரபரப்பிற்கு சென்றது.
கடைசி ஓவரை ஜமான் கான் வீசினார். முதல் பந்தில் லெக் பைஸ் மூலம் ஒரு ரன் கிடைக்க, இரண்டாவது பந்து டாட் ஆனது. அடுத்த பந்தில் அசலங்கா ஒரு ரன் எடுத்தார்.
4வது பந்தை எதிர்கொண்ட பிரமோத் கீப்பரிடம் பந்தை தவறவிட்டு ரன் ஓட முயற்சிக்க, ஜமான் கான் அவரை அசால்ட்டாக ரன் அவுட் செய்தார்.
Twitter (icc)
வெற்றி நாயகன் அசலங்கா
ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட அசலங்கா ஷாட் விளாச, அது எட்ஜ் ஆகி ஸ்லிப் திசையில் சென்று பவுண்டரியாக மாறியது. இதன் காரணமாக ஒரு பந்தில் 2 ஓட்டங்கள் தேவை என்ற நிலை உருவானது.
அசலங்கா அந்த பந்தை ஆளில்லா பகுதிக்கு தட்டிவிட்டு எளிதாக 2 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
அவர் 47 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்கள் விளாசினார். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
What a thrilling victory!
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) September 14, 2023
Sri Lanka secures a spot in the #AsiaCup2023 finals on Sunday with a thrilling 2-wicket win over Pakistan!#AsiaCup2023 #SLvPAK pic.twitter.com/lJF3CCNjPK
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |