One man ஷோ காட்டிய இலங்கை கேப்டன்! அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 127 ரன் விளாசல்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்கா சதம் விளாசினார்.
நங்கூர ஆட்டம்
கொழும்பில் நடந்து வரும் முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி முதலில் தடுப்பாடியது. நிசங்கா (5), அவிஷ்கா (1), கமிந்து மெண்டிஸ் (5) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.
குசால் மெண்டிஸ் 19 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அணித்தலைவர் சரித் அசலங்கா (Charith Asalanka) நங்கூரம் போல் நின்று ஆடினார்.
அவுஸ்திரேலிய பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்ட அவர் சிக்ஸர்களை பறக்கவிடவும் தவறவில்லை. துனித் வெல்லாலகே தனது பங்குக்கு 34 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்து ஷார்ட் ஓவரில் அவுட் ஆனார்.
Leading from the front! 💪🏻
— FanCode (@FanCode) February 12, 2025
Sri Lanka skipper Charith Asalanka fought a lone battle, scoring a magnificent century to take his side past the 200 run mark! 👏🏻#SLvAUSonFanCode pic.twitter.com/UQuTB5eGI3
அசலங்கா சதம்
ஒரு கட்டத்தில் இலங்கை அணி 150 ஓட்டங்களை எட்டுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அசலங்கா தனது அபார ஆட்டத்தினால் 200 ஓட்டங்களை கடக்க வைத்தார்.
மேலும் அவர் தனது 4வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். 9வது விக்கெட்டாக அவுட் ஆன அவர், 126 பந்துகளில் 127 ஓட்டங்கள் குவித்தார். இதில் 5 சிக்ஸர், 14 பவுண்டரிகள் அடங்கும்.
இலங்கை அணி 46 ஓவரில் 214 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. சியான் அப்போட் 3 விக்கெட்டுகளும், ஸ்பென்சர் ஜான்சன், ஆரோன் ஹார்டி மற்றும் நாதன் எல்லிஸ் தலா 2 விக்கெட்டுகளும், மேத்யூ ஷார்ட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |