இலங்கையில் அவர்களுக்கு எதிரான தொடரை இழந்தோம்; ஆனால் இப்போட்டி - வங்காளதேசம் குறித்து சரித் அசலங்கா
வங்காளதேச அணியின் தற்போதைய ஃபார்மில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்கா ஒப்புக்கொண்டுள்ளார்.
சவாலான போட்டி
ஆசியக் கிண்ணத் தொடரின் இன்றையப் போட்டியில் இலங்கை மற்றும் வங்காளதேச அணிகள் மோதுகின்றன.
இப்போட்டிக்கு குறித்து பேசிய இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்கா, ரசிகர்களுக்கு நல்ல ஆட்டத்தை கொடுக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "இது உண்மையில் ரசிகர்களுக்கான போட்டி. ஆனால் வீரர்களாகிய எங்களுக்கு, இது ஒரு நல்ல சவாலான போட்டி. தற்போது அவர்கள் (வங்காளதேசம்) சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.
இலங்கையில் நாங்கள் அவர்களுக்கு எதிரான தொடரை இழந்தோம். ஆனால் நாங்கள் தோற்றாலும் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம்.
எங்கள் அடிப்படைகளைப் பின்பற்றவும். எங்கள் திட்டங்களில் ஒட்டிக்கொள்ளவும், சிறப்பாக செயல்படவும் நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |