ஹாங்காங் அணியை வெளியேற்றிய இலங்கை: சில ஏமாற்றங்கள் என குறிப்பிட்ட அசலங்கா
ஹாங் காங் அணிக்கு எதிரான ஆசியக் கிண்ணப் போட்டியில் இலங்கை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நிசாகத் கான் அரைசதம்
துபாயில் நேற்று நடந்த போட்டியில் இலங்கை மற்றும் ஹாங் காங் அணிகள் மோதின.
முதலில் ஆடிய ஹாங் காங் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்கள் எடுத்தது.
நிசாகத் கான் (Nizakat Khan) 38 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் விளாசினார். அன்ஷுமான் ராத் 48 ஓட்டங்கள் எடுத்தார். சமீரா 2 விக்கெட்டுகளும், ஹசரங்கா மற்றும் ஷானகா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 18.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 153 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பதும் நிசங்கா (Pathum Nissanka) 44 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் விளாசினார். ஹசரங்கா ஆட்டமிழக்காமல் 9 பந்துகளில் 20 ஓட்டங்கள் எடுத்தார்.
நடப்பு தொடரில் ஹாங் காங் அணியின் மூன்றாவது தோல்வி இது என்பதால் தொடரைவிட்டு வெளியேறியது.
சில விக்கெட்டுகளை இழந்தோம்
வெற்றி குறித்து பேசிய இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்கா (Charith Asalanka), "சில விடயங்களில் ஏமாற்றங்கள் இருந்தன. அது பந்துவீச்சில் முதல் மூன்று ஓவர்கள். பின்னர் துடுப்பாட்டத்தில், 16வது ஓவரில் என்னுடையது உட்பட சில விக்கெட்டுகளை இழந்தோம்.
தொடர்ந்து குறுகிய வடிவங்களில் கூட இவை நடக்காது. நாங்கள் தொழில்முறை வீரர்கள், நாங்கள் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும். துடுப்பாட்டத்தை சிறப்பாக செய்தவர்களுக்கு நன்றி. ஒவ்வொரு அணிக்கும் எதிராக விளையாடுவதில் அழுத்தம் உள்ளது" என்றார்.
இலங்கை அணி அடுத்ததாக அபுதாபியில் ஆப்கானிஸ்தானை 18ஆம் திகதி எதிர்கொள்ள உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |