கைகள், தோள்பட்டையை வலுவாக வைத்திருக்க வேண்டுமா? அப்போ மறக்கமால் இந்த பயிற்சியை செய்திடுங்க!
yoga
exercise
By Kishanthini
இன்றைய இல்லத்தரசிகளுக்கு இருக்கும் வேலைப்பளு குறைவுதான்.நவீன தொழில்நுட்ப உலகில், வேலைகள் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளதே முக்கிய காரணமாகும். இதனால் இன்று பலர் பெண்கள் பல்வேறு உடல் ரீதியான பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர்.
இவ்வாறு அவதிப்படும் பெண்கள் வீட்டில் இருந்தப்படியே ஒரு சில யோகப்பயிற்சிகளை மேற்கொள்ளுவதன் மூலம் அனைத்து உடல் பிரச்னைகளுக்கும் தீர்வு காணலாம்.
அந்தவகையில் கைகள், தோள்பட்டையை வலுவாக வைத்திருக்க என்ன உதவும் ஓர் உடற்பயிற்சி ஒன்றை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
எப்படி செய்வது?
-
இரண்டு கால்களையும் நீட்டி, தரையில் அமர வேண்டும். பின், வலது காலை இடது புறமாக மடக்கி, இடது தொடைப்பகுதியில் வைக்க வேண்டும்.
-
அதேபோல், இடது காலை வலது புறமாக மடக்கி, வலது தொடைப்பகுதியில் வைக்க வேண்டும். இந்த நிலையே, பத்மாசனம். ஆரம்பத்தில் பத்மாசன நிலையில் அமர்வது சற்று சிரமமானதாகவே இருக்கும்.
-
உத்தித பத்மாசனம் என்றால், பத்மாசன நிலையிலேயே, கைகளை கொண்டு உடலை தூக்குவதாகும். பத்மாசனத்தில் அமர்ந்தபடி, இரண்டு கைகளையும், இடுப்புக்கு நேராக தரையில் வைக்க வேண்டும்.
- பின், கைகளை தரையில் உந்தி, உடலை தூக்க வேண்டும். இந்த நிலையில் குறைந்தது, 20 வினாடிகள் இருக்க வேண்டும். உடலை தூக்கி நிறுத்தும்போது, மூச்சை இழுத்துப் பிடிக்க வேண்டியதில்லை; சீராக மூச்சு விட வேண்டும். அதேபோல், கைகள் வலித்தால், உடனடியாக உடலை கீழே இறக்க வேண்டும்.
பயன்கள்
- பத்மாசனத்தில் உடலை தூக்கி நிறுத்துவதால், கவனிப்பு திறன் அதிகரிக்கும். இதனால் மாணவர்களின் கவனிப்புத்திறன், மனஒருமைப்பாடு, நினைவுத்திறன் அதிகரிப்புக்கு, இப்பயிற்சி மிகவும் நல்லது.
- கை வலிக்கு முக்கிய காரணம், நமது தோள் பட்டைகள் வலுவில்லாமல் இருப்பதுதான்.
உடல் எடை முழுவதையும், கைகளால் தூக்கி நிறுத்துவதால், கைகளும், தோள்பட்டைகளும் வலுப்பெறும்.
- புதிதாக முதல்கட்டமாக பயிற்சி எடுக்கும்போது, 20 வினாடிகள் வரை, இந்த நிலையில் இருக்கலாம்.
- நன்கு பயிற்சி எடுத்தபின், அதிக வினாடிகள் இருக்கலாம்.
அதிக நேரம் இதே நிலையில் இருந்தால், மூச்சுக்குழாய் சுத்தமாகும். இதனால், இரவு நேரம் மற்றும் காலநிலை மாற்றத்தின்போது ஏற்படும், சுவாசப்பிரச்னைகள் சீராகும்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US