குமார் சங்ககாராவின் இலங்கை மாஸ்டர்ஸ் அபார வெற்றி! மாஸ்டர்ஸ் டி20யில் தெறிக்கவிட்ட இருவர்
மாஸ்டர்ஸ் லீக் டி20 போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸை வீழ்த்தியது.
ஹஷிம் ஆம்லா அதிரடி
நவி மும்பையில் நடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க லெஜெண்ட்ஸ் அணி முதலில் துடுப்பாடியது. ஹஷிம் ஆம்லா (Hashim Amla) அதிரடியாக 53 பந்துகளில் 76 ஓட்டங்களும், அணித்தலைவர் ஜேக் கல்லிஸ் 24 ஓட்டங்களும் எடுத்தனர்.
டேன் விலாஸ் ஆட்டமிழக்காமல் 13 பந்துகளில் 28 ஓட்டங்கள் விளாச, தென் ஆப்பிரிக்கா 180 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் குமார் சங்ககாரா (Kumar Sangakkara) 16 ஓட்டங்கள் எடுத்த நிலையில் போல்டானார்.
Kumar Sangakkara ❤️🇱🇰
— wajith.sm (@sm_wajith) February 26, 2025
Timing 🫡 #mastersleague @KumarSanga2 ❤️ pic.twitter.com/Oy3cua1OqM
இலங்கை மாஸ்டர்ஸ் வெற்றி
அடுத்து உபுல் தரங்கா 29 ஓட்டங்களிலும், திரிமன்னே 13 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, அசெல குணரத்னே மற்றும் சின்தக ஜெயசிங்கே இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இருவரும் ஆட்டமிழக்காமல் அரைசதம் விளாச, இலங்கை அணி 17.2 ஓவரிலேயே 183 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அசெல குணரத்னே (Asela Gunaratne) 59 (33) ஓட்டங்களும், சின்தக ஜெயசிங்கே 51 (25) ஓட்டங்களும் எடுத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |