ரூ.111 கோடியை நன்கொடையாக அள்ளி கொடுத்தவர்.. யார் இந்த பெண்?
ரூ.111 கோடியை நன்கொடையாக அள்ளி கொடுத்த பெண் யார் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
யார் அவர்?
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான Infosys நிறுவனத்தை இணைந்து நிறுவிய நாராயண மூர்த்தியின் கூட்டாளிகளில் ஒருவர் தான் கே.தினேஷ்.
ஃபோர்ப்ஸின் மதிப்பின்படி தற்போது ரூ.20737 கோடி சொத்து மதிப்பை கே.தினேஷ் வைத்துள்ளார். இவர், 2011 -ம் ஆண்டில் Infosys நிர்வாக குழுவிலிருந்து விலகியிருந்தாலும், இவரது குடும்பத்தின் அறக்கொடை பங்களிப்பால் பிரபலமாக இருந்தார்.
இவரது அறக்கொடைக்கு பெரிய ஆதரவாளராக இருந்தவர்அவரது மனைவி ஆஷா தினேஷ் (Asha Dinesh) . இவரை பற்றி தான் பார்க்க போகிறோம்.
ஃபோர்ப்ஸின் படி, 2000 -ம் ஆண்டு முதல் ரூ.111 கோடிக்கு மேல் நன்கொடையை முதல் கே.தினேஷ் மற்றும் அவரது மனைவி ஆஷா தினேஷ் அளித்துள்ளனர்.
கடந்த 2000 -ம் ஆண்டில் தனது மாமனார் எஸ் நஞ்சுண்டியா மற்றும் மனைவி ஆஷாவுடன் இணைந்து ஆஷ்ரயா ஹஸ்தா அறக்கட்டளையை (Ashraya Hastha Trust ) கே.தினேஷ் தொடங்கினார். இந்த நிறுவனமானது விலங்குகள் நலன், சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் ஆஷா தினேஷ் அறச்செயல்களில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் தொழிலதிபராகவும் உள்ளார்.
இவர் தனது 50 வயதில் தொழில் முனைவோராக அறிமுகமாகி, தனது மகள் திவ்யாவுடன் இணைந்து Vedaearth என்ற பிராண்டைத் தொடங்கினார்.
இது ஒரு தோல் பராமரிப்பு மற்றும் சுய பாதுகாப்பு பிராண்ட். தற்போது, பெங்களூரில் Vedaearth தயாரிப்புகளைப் பயன்படுத்தும் சைவ ஸ்பாக்களைக் கொண்டுள்ளது.