விறுவிறுப்படையும் ஆஷஸ் டெஸ்ட் இறுதி நாள்: ஸ்மித் கேட்சை தவறவிட்ட ஸ்டோக்ஸ்: வீடியோ
ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டியின் 5 வது நாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் கேட்சை இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தவறவிட்டது இங்கிலாந்து ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடைசி நாள் ஆட்டம்
இங்கிலாந்து- அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான 5 வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 5வது மற்றும் இறுதி நாளான இன்று அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 238 ஓட்டங்கள் குவித்துள்ளது.
தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்ற அவுஸ்திரேலிய அணிக்கு 146 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
மதிய உணவு இடைவெளியில், அவுஸ்திரேலிய அணி சார்பில் களத்தில் ஸ்டீவ் ஸ்மித் 40 ஓட்டங்களுடனும் ஹெட் 31 ஓட்டங்களுடனும் உள்ளனர்.
கேட்சை தவறவிட்ட கேப்டன் பென் ஸ்டோக்ஸ்
அவுஸ்திரேலியா இங்கிலாந்து இடையிலான பரபரப்பான இந்த ஆட்டத்தில் மொயின் அலி வீசிய பந்தில் அவுஸ்திரேலியாவின் முக்கிய வீரரான ஸ்டீவ் ஸ்மித் கேட்ச் ஒன்றை வழங்கினார்.
இந்த கேட்சை இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் துள்ளிப் பிடித்து இருந்தாலும் துர்திஷ்டவசமாக பந்து இருந்த கை அவரது காலில் வேகமாக இடித்ததில் பந்தை தனது கையில் இருந்து ஸ்டோக்ஸ் நழுவ விட்டார்.
Out or not out? ?♂️ #EnglandCricket| #Ashes pic.twitter.com/q2XCJuUpxM
— England Cricket (@englandcricket) July 31, 2023
பந்து அவரது கட்டுப்பாட்டை இழந்ததால் நடுவரும் இதற்கு விக்கெட் கொடுக்க மறுத்துவிட்டார், இருப்பினும் மூன்றாவது நடுவரிடம் இங்கிலாந்து அணி சென்றது.
ஆனால் கேட்சை நன்றாக ஆராய்ந்த மூன்றாவது நடுவர் கள நடுவரின் முடிவை ஆதரிப்பதாக அறிவித்தார்.
ஆஷஸ் போன்ற ஒரு தொடரில் ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட் மிக முக்கியமானதாக பார்க்கப்படும் நிலையில் பென் ஸ்டோக்ஸ் தவறவிட்ட கேட்ச் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வெற்றியில் எத்தகைய பாதிப்பை ஏற்படத்த உள்ளது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |