இங்கிலாந்து கிரிக்கெட்டில் ட்விஸ்ட்! ஓய்வை அறிவித்த 602 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடைசி டெஸ்ட்
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து வரும் ஆஷஸ் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட்டுக்கு 389 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இதன்மூலம் 377 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜானி பேர்ஸ்டோவ் 78 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஆண்டர்சன் களத்தில் உள்ளனர்.
Forever remembered for ????? mesmerising spells, ????? Ashes battles, ????? 602* wickets.
— England Cricket (@englandcricket) July 29, 2023
Take a bow, Stuart Broad ?#EnglandCricket | #Ashes pic.twitter.com/6WvdTW5AoA
ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு அறிவிப்பு
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக, இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் அறிவித்தார். மூத்த வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெறுவதாக தகவல் வெளியானதை அவர் அதிரடியாக மறுத்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக பிராட் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
(John Walton/PA)
டெஸ்ட் கிரிக்கெட்டில் 602 விக்கெட்டுகள் வீழ்த்திய பிராட், ஒருநாள் போட்டியில் 178 விக்கெட்டுகளும், டி20 போட்டியில் 65 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார்.
Twitter (EnglandCricket)
2010ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில், ஸ்டூவர்ட் பிராட் 9வது விக்கெட்டில் களமிறங்கி 169 ஓட்டங்கள் விளாசி மிரட்டினார்.
Getty Images
Twitter (EnglandCricket)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |