அவுஸ்திரேலியா ஆல்அவுட்! அனல் பறக்கும் ஆஷஸ் கடைசி டெஸ்ட்
ஆஷஸ் கடைசி டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 295 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
விக்கெட்டுகளை பறிகொடுத்த அவுஸ்திரேலியா
இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கடைசி டெஸ்ட் லண்டனில் நடந்து வருகிறது.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 283 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக புரூக் 85 ஓட்டங்கள் எடுத்தார்.
அதன் பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலியாவுக்கு தொடக்க சிறப்பாக அமைந்தாலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
Twitter (England Cricket)
Twitter (England Cricket)
ஸ்மித் நங்கூர ஆட்டம்
ஒருபுறம் ஸ்மித் நங்கூர ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். அவர் 71 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். கேப்டன் கம்மின்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, முர்பி அதிரடியில் மிரட்டினார். அவர் 39 பந்துகளில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 34 ஓட்டங்கள் விளாசினார்.
கடைசி விக்கெட்டாக கம்மின்ஸ் 36 ஓட்டங்களில் ரூட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 295 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
Twitter (ICC)
இதன்மூலம் அந்த அணி 12 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளும், மார்க் வுட், ரூட் மற்றும் பிராட் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
Evenly poised after two days and an innings each #Ashes
— cricket.com.au (@cricketcomau) July 28, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |