பெய்ல்ஸை மாற்றி வைத்து அவுட் செய்யலாமா? பிராட் செயலால் அவுட் ஆன வீரர்! ஆச்சரிய வீடியோ
ஆஷஸ் கடைசி டெஸ்டில் பிராட் பெய்ல்ஸை மாற்றி வைத்த பின் லபுசாக்னே அவுட் ஆனது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஆஷஸ் கடைசி டெஸ்ட்
லண்டன் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் கடைசி டெஸ்ட் நடந்து வருகிறது.
இன்றைய 2ஆம் நாள் ஆட்டத்தில் கவாஜா 47 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து மார்னஸ் லபுசாக்னே களமிறங்கினார்.
அப்போது பீல்டிங்கில் இருந்த ஸ்டூவர்ட் பிராட் ஸ்டம்ப் மீது இருந்த பெய்ல்ஸை இடம் மாற்றி வைத்து விட்டு சென்றார்.
????: Stuart Broad
— England Cricket (@englandcricket) July 28, 2023
??????????: Mind Games Extraordinaire
Incredible, Broady ?? #EnglandCricket | #Ashes pic.twitter.com/MdeuNgrN2F
பிராட்டின் செயல்
இதனால் மனதளவில் லபுசாக்னேவை மாற்றி ஆட்டமிழக்க செய்யலாம் என பிராட் நினைத்து போல் அவரது செயல் அமைந்தது.
அதற்கு ஏற்றார் போல் மார்க் வுட் ஓவரில் ஜோ ரூட்டிடம் கேட்ச் கொடுத்து லபுசாக்னே ஆட்டமிழந்தார். மொத்தம் 82 பந்துகளை எதிர்கொண்ட லபுசாக்னே, பவுண்டரிகள் அடிக்காமல் 9 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.
Joe Root that is ??????????? ?
— England Cricket (@englandcricket) July 28, 2023
Come for the catch, stay for Stuart Broad's reaction ?#EnglandCricket | #Ashes pic.twitter.com/W3QmdP1CAY
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |