மழையால் டிராவில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்: விரக்தியடைந்த பென் ஸ்டோக்ஸ்
மான்செஸ்டரில் ஆஷஸ் 4வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கவிருந்தது. ஆனால், மழையால் ஆட்டம் தாமதமானது.
போராடிய அவுஸ்திரேலிய அணி
அவுஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 214 ஓட்டங்கள் எடுத்திருந்தது. மேலும் 61 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது.
மிட்செல் மார்ஷ் 31 ஓட்டங்களுடனும், கிரீன் 3 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். 5 விக்கெட்டுகளே எஞ்சி இருந்ததால் இங்கிலாந்து அணியின் கையே ஓங்கி இருந்தது.
@cricketcomau (Twitter)
இதனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று விடலாம் என நம்பியிருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் மழை நிற்கவில்லை.
@cricketcomau (Twitter)
டிராவில் முடிந்த போட்டி
கடைசியில் போட்டி டிராவில் முடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்த அறிவிப்பால் விரக்தி அடைந்தார்.
@englandcricket (Twitter)
சூலை 27ஆம் திகதி நடைபெற உள்ள கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் டெஸ்ட் தொடர் 2-2 என டிராவில் முடியும்.
ஒருவேளை அவுஸ்திரேலியா வென்றால் 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும்.
@englandcricket (Twitter)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |