மொத்த அணியும் அவுட் ஆனதால் சதத்தை தவறவிட்ட வீரர்! 99 ஓட்டங்களில் நாட்அவுட்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 592 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்து ஆதிக்கம்
மான்செஸ்டரில் நடந்து வரும் ஆஷஸ் 4வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 592 ஓட்டங்கள் குவித்தது.
ஹாரி புரூக் 61 ஓட்டங்களும், கேப்டன் ஸ்டோக்ஸ் 51 ஓட்டங்களும் எடுத்தனர். பேர்ஸ்டோவ் அதிரடியில் மிரட்டினார்.
Run Machine
— England Cricket (@englandcricket) July 21, 2023
?????????
1. A batter competent or capable of scoring quickly
2. Jonny Bairstow #EnglandCricket | #Ashes pic.twitter.com/HXGH8W0w8f
சிக்ஸர், பவுண்டரிகளை விளாசிய அவர் 81 பந்துகளில் 99 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, மறுமுனையில் கடைசி விக்கெட்டாக ஆண்டர்சன் அவுட் ஆனார்.
இதனால் 13வது சதத்தினை பேர்ஸ்டோவ் தவறிவிட்டார். எனினும் இங்கிலாந்து அணி 275 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.
Twitter (england cricket)
ஹேசல்வுட் 5 விக்கெட்டுகள்
அவுஸ்திரேலிய அணியின் தரப்பில் ஹேசல்வுட் 5 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் கிரீன் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
Good reward for Josh Hazlewood's toil, who grabbed another five-wicket haul #Ashes pic.twitter.com/0CE8VOliMw
— cricket.com.au (@cricketcomau) July 21, 2023
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் கவாஜா 18 ஓட்டங்களிலும், வார்னர் 28 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
லபுசாக்னே (17), ஸ்மித் (10) இருவரும் விளையாடி வருகின்றனர். அவுஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் இதுவரை 74 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
Twitter (ICC)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |