ஆஷஸ் கடைசி டெஸ்ட்: 45 ஓவர்களில் முடிந்த முதல் நாள் ஆட்டம்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்டின் முதல் நாளில் இங்கிலாந்து 211 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
கடைசி ஆஷஸ் டெஸ்ட்
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஆஷஸ் டெஸ்ட் சிட்னியில் தொடங்கியுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து துடுப்பாட்டத்தை தொடங்கியது. பென் டக்கெட் (Ben Duckett) 27 (24) ஓட்டங்களும், ஜக் கிராவ்லே 16 (29) ஓட்டங்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஜேக்கப் பெத்தேலை 10 ஓட்டங்களில் போலண்ட் வெளியேற்ற ஜோ ரூட், ஹாரி ப்ரூக் கைகோர்த்தனர்.

இந்த கூட்டணி வேகமாக ஓட்டங்களை சேர்த்தது. இருவருமே அரைசதம் விளாச இங்கிலாந்து அணி 200 ஓட்டங்களை கடந்தது.
முன்கூட்டியே நிறுத்தம்
அணியின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.
பின்னர் மழை நின்றபோதும் போதைய வெளிச்சமின்மை காரணமாக, 45 ஓவர்கள் வீசப்பட்ட நிலையிலேயே முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
ஹாரி ப்ரூக் (Harry Brook) ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 78 (92) ஓட்டங்களுடனும், ஜோ ரூட் (Joe Root) 8 பவுண்டரிகளுடன் 72 (103) ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |