இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மேற்கு வங்கத்தில் வெற்றி
மேற்கு வங்கத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசோக் டிண்டா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார்.
294 சட்டசபை தொகுதிகளில்
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில், ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 148 இடங்கள் தேவை என்ற நிலையில், 200க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க முன்னிலை பெற்று வெற்றி பெற்றது.
இதன்மூலம் அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்தி முதன் முறையாக பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
அசோக் டிண்டா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அசோக் டிண்டா (Ashok Dinda), மேற்கு வங்கத்தில் பா.ஜ.க சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார்.
அம்மாநிலத்தின் மொய்னா தொகுதியில் போட்டியிட்ட அவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை விட 16,241 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |