நடிகை கீர்த்தியை கரம் பிடித்த அசோக் செல்வன்
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அசோக் செல்வன் தனது காதலியான நடிகை கீர்த்தி பாண்டியனை இன்று திருமணம் செய்து கரம்பிடித்துள்ளார்.
நடிகர் அசோக் செல்வன்
‘சூது கவ்வும்’ படத்தில் நடிக்கத்தொடங்கி ‘ஓ மை கடவுளே’, ‘நித்தம் ஒரு வானம்’ என பல்வேறு படங்களை நடித்துள்ளார். அண்மையில் இவர் நடித்து வெளியான ‘போர்தொழில்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் அருண்பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வனும் காதலித்து இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை தெரிவித்து இன்று திருநெல்வேலி, பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரியில் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம்
நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கலந்து கொண்டனர். மேலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பின்னர் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
#AshokSelvan - #KeerthiPandian Marriage Video! pic.twitter.com/uCxiUlyVjS
— Rustic Roots (@askrusticroots) September 13, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |